கீழ்மாடியில் ராஜிநாமா; மேல்மாடியில் இணைப்பு விழா என அரங்கேற்றிய ஒரே கட்சி தவெகதான்! இபிஎஸ்
அதிமுக நிர்வாகி மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்...

இபிஎஸ் - ENS
அதிமுக நிர்வாகி மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார்.
புகாரையடுத்து, அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மன்னனை கைது செய்தனர்.
இதற்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னன் -யை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.
குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சிதான் தவெக.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, “தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?” என்று மக்களே அருவருக்கும் வகையில், “கீழ்மாடியில் ராஜிநாமா; மேல்மாடியில் இணைப்பு விழா” என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெகதான்.
இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி மன்னனை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது.
முதல்வரை அணுக முடியாமல், பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
சொந்த கட்சி எம்எல்ஏ-க்களை சமாதானப் படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்!
உடனடியாக மன்னனை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à®´à® à®à¯à®³à¯à®à¯à®ªà¯ பரபà¯à®ªà¯à®¤à¯ தà¯à®£à¯à®à¯ à®à¯à®¯à®²à®¾à®³à®°à¯à®®à¯, மதà¯à®°à¯ à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ தà¯à®£à¯ à®®à¯à®¯à®°à¯à®®à®¾à®© திரà¯. P.M. மனà¯à®©à®©à¯ à®à®µà®°à¯à®à®³à¯ பà¯à®¯à¯ வழà®à¯à®à®¿à®²à¯ à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®³à¯à®³ தவà¯à® à®à®°à®à®¿à®©à¯ à®à®µà®²à¯à®¤à¯à®±à¯à®à¯à®à¯ à®à®©à®¤à¯ à®à®à¯à®®à¯ à®à®£à¯à®à®©à®®à¯.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 6, 2026
à®à¯à®¤à®¿à®°à¯ பà¯à®°à®®à¯ நà®à®¤à¯à®¤à®¿, à®à®à¯à®à®³à¯ à®à¯à®à¯à®à®£à®¿à®¯à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®®à®®à¯à® à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ à®à®à®¤à¯à®¤à®¿ à®à¯à®¯à¯à®´à¯à®¤à¯à®¤à¯ வாà®à¯à®à®¿ à®à®à¯à®à®¿à®à¯à®à¯â¦
Summary
EPS condemns the TVK-led government over the arrest of AIADMK Mannan in a false case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

