வடகிழக்குப் பருவமழையின் முதல் நாளே வெளுத்து வாங்கிய மழை! எங்கு எவ்வளவு தெரியுமா?
வடகிழக்குப் பருவமழையிள் முதல் நாளில் பதிவான மழையின் அளவு பற்றி..

மழை வெளுத்து வாங்கியது - file photo
தமிழ்நாட்டில் அக். 15 ( நேற்று) வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த ஒரு சில மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் நேற்று மதியம் முதல் பல்வேறு மாவட்டங்களில் சராசரியாக மிதமானது முதல் கனமழை வரை பதிவானது. இதனால், விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியந்தனர்.
குறிப்பாக கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, தேனி மாவட்டங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் அடையாமடையில் 179.6 மி. மீ. மழையும், ஈரோட்டில் 156 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அக். 15-ம் தேதி 8.00 மணி முதல் அக். 16-ம் தேதி (இன்று) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் நிலவரம்...
தமிழ்நாட்டில் பதிவான மழையின் அளவு (மி.மீ.)
அடையாமடை (கன்னியாகுமரி) – 179.6 மி.மீ.
ஈரோடு – 156 மி.மீ.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் – 153 மி.மீ.
மாக்கினாம்பட்டி (கோவை) – 149 மி.மீ.
பெரியகுளம் – 147 மி.மீ.
பெருஞ்சாணி (கன்னியாகுமரி) – 127.6 மி.மீ.
பரமத்தி (கரூர்) – 126.6 மி.மீ.
வைகை அணை – 124.2 மி.மீ.
பழனி – 118 மி.மீ.
பஞ்சப்பட்டி (கரூர்) – 115 மி.மீ.
புத்தன் அணை (கன்னியாகுமரி) – 112 மி.மீ.
சிற்றார் (கன்னியாகுமரி) – 111.8 மி.மீ.
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) – 108.2 மி.மீ.
பெரம்பலூர் – 103 மி.மீ.
ஆண்டிப்பட்டி – 102 மி.மீ.
ஊத்துக்குளி – 100 மி.மீ.
சிவகிரி (தென்காசி) – 100 மி.மீ.
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) – 97.6 மி.மீ.
குருந்தன்கோடு (கன்னியாகுமரி) – 97 மி.மீ.
வத்தலை அணைக்கட்டு (திருச்சி) – 94 மி.மீ.
மொடக்குறிச்சி – 94 மி.மீ.
பல்லடம் – 92 மி.மீ.
போத்தனூர் ரயில் நிலையம் – 90.6 மி.மீ.
சிவலோகம் – 88.6 மி.மீ.
திற்பரப்பு – 88 மி.மீ.
கோடநாடு – 81 மி.மீ.
நாமக்கல் – 80 மி.மீ.
பரமத்தி வேலூர் – 80 மி.மீ.
தக்கலை – 80 மி.மீ.
மஞ்சளாறு – 79 மி.மீ.
நம்பியாறு அணை – 75 மி.மீ.
ஊத்து (நெல்லை) – 74 மி.மீ.
பவானி – 72 மி.மீ.
மதுக்கரை தாலுகா அலுவலகம் – 72 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

