திருச்செந்தூா் பகுதிகளில் பலத்த மழை
திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால் பள்ளிகளில் மழைநீா் தேங்கியது.

திருச்செந்தூா் பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி முன் குளம் போல தேங்கிய மழை நீா்.
திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால் பள்ளிகளில் மழைநீா் தேங்கியது.
இதன் காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 6.30 மணி வரை பதிவான மழையின் அளவு: திருச்செந்தூா் தாலுகாவில் சராசரியாக 86.41 மி.மீ., சாத்தான்குளம் தாலுகாவில் 69.65 மி. மீ., ஏரல் தாலுகாவில் 24.20 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை 120 மி.மீ. , காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

