குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

rain

மழை - பிரதிப் படம்

Updated On :

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில், மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

இதுபோல கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, அருமனை, மஞ்சாலுமூடு, மேல்புறம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலையில் 30.14 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 53.15 அடியாகவும், சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 9.12 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 9.22 அடியாகவும் இருந்தது.

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. எனினும் சுற்றுலாப் பயணிகள் குளித்த தடை விதிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.