சென்னை மக்களே தயாரா? வெய்யில் காய்கிறதே என நம்பிவிட வேண்டாம்! மழை வருகிறது!
சென்னை மக்களே வெய்யில் காய்கிறதே என நம்பிவிட குடையில்லாமல் செல்ல வேண்டாம்...

மழைக் காற்று - பிரதி படம் - ENS
சென்னை மக்கள் பல மாதங்களாக ஏங்கிக் கொண்டிருந்த அந்த மழை நாள்கள் வந்து கொண்டிருப்பதாக மிக முக்கியமான நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான்.
நான் சொன்னதும் மழை வந்ததா? என்று பாடலைப் பாடிக் கொண்டே இந்த பதிவை அவர் போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு அவர் நாளை முதல் மழை பெய்யும், இன்றே துணிகளை உலர்த்திக் கொள்ளுங்கள் என்று 3 நாள்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
அவர் சொன்னதுபோலவே, அடுத்த நாள் முதல் வெளியே துணிகளை தலைகாட்ட வைக்க முடியாமல்தான் சென்னை மக்கள் இருக்கிறார்கள். ஆனால், காய்ந்த வெய்யிலில், மனிதர்களே தலைகாட்ட முடியாமல் இருந்ததே என்று நினைத்து துணிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
மூன்று நாள்களாக சென்னையில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. ஓரிடத்தில் மழை, பக்கத்து இடத்தில் வெய்யில் என சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மாயாஜாலம் காட்டிக்கொண்டிருந்தது.
நேற்று மாலை சென்னையில் பரவலாக மழை பெய்துள்ளது. வேலைக்குச் சென்றோர் வீடு திரும்ப தயாராக நேரத்தில் மிகச் சரியாக மழையும் வேலைக்குக் கிளம்பியிருந்தது. அனைவரும் வீட்டுக்குச் சென்று சேரும்வரை தன் கடைமையை மழை ஆற்றிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் பதிவில், மழை மேகங்கள், வட தமிழகத்தின் மீது கவனத்தை திரும்பவுதால், சென்னை ஒரு முக்கிய பகுதியாக (hotspot zone) மாறுகிறது. குறிப்பாக, அக்டோபர் 17–18 மற்றும் அக்டோபர் 21–22 ஆகிய தேதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பகல் நேரங்களில் வெய்யில் நிலவினாலும், திடீரென மழை பெய்யக்கூடும். கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் (KTCC) தொடர்ந்து மழை பெய்யும் சூழல் நிலவுகிறது.
தமிழகம் மற்றும் சென்னை-புறநகர் பகுதிகளுக்கான (KTCC) மழை அளவுகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, தமிழகத்திற்கான விரிவான வானிலை முன்னறிவிப்பு பதிவிடப்படும் என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

