ஆற்காடு அருகே தேவாவின் உடல் நாளை (அக். 18) நல்லடக்கம்! ஸ்ரீகாந்த் தேவா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாளை தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா தகவல்...

Updated On :

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல் ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று (அக். 17) காலமானார். தேவாவின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

தற்போது தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"அப்பா திடீரென எங்களைவிட்டு போய்விட்டார். என்னால் பேசக்கூட முடியவில்லை. அவரது பாடல்கள் எங்கும் ஒலிக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று கூறிய முதல்வருக்கு நன்றி.

எங்களுடைய சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் அப்பாவின் உடல் நாளை (அக். 18, ஞாயிறு) மாலை அடக்கம் செய்யப்படுகிறது. நாளை பகல் 1 மணி சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது" என்று கூறினார்.

Summary

Music Director Deva final ritual to be laid near Arcot tomorrow: Srikanth Deva

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.