137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

எழும்பூர் - காரைக்குடிக்கு இன்று சிறப்பு ரயில்!

எழும்பூரிலிருந்து காரைக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 18) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஓணம் பண்டிகை

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Updated On :

எழும்பூரிலிருந்து காரைக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 18) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜையை முன்னிட்டு எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 18) நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்: 06037) அதேநாள் பிற்பகல் 11.45 மணிக்கு காரைக்குடியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் அக். 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06038) மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகபட்டினம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.