சோழவரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் பலி!
சோழவரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் பலியானது குறித்து...

பலியான குழந்தைகள் - படம் - தினமணி
சோழவரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் திங்கள்கிழமை (அக். 19) பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம் குலத்தாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான வேல்முருகன் 28. இவர் அண்மையில் புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்து வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வேல்முருகன் தமது உறவினர் ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் ராஜா குடும்பத்தினருடன் சேர்ந்து அவரவருக்கு சொந்தமான இரண்டு ஆட்டோக்களில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சோழவரம் அடுத்த ஆத்தூர் மேம்பாலம் அருகே வந்தபோது, கார்த்திக் ராஜா ஒட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பின்புறம் அமர்ந்திருந்த வேல்முருகனின் மகள் ஸ்ரீனிகா, கார்த்திக்ராஜாவின் மகள் ஹர்ஷினி,மகன் கவினேஷ், மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
பின்புறம் ஆட்டோவில் வந்த வேல்முருகன் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மூன்று குழந்தைகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீனிகா, ஹர்ஷினி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த கார்த்திக் ராஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Two children were killed in an accident near Cholavaram when the driver lost control and the auto overturned.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


