பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம், ஆக்சிஜன், மருத்துவ சேவை! முதல்வர் அறிவுறுத்தல்

பருவமழையையொட்டி அரசு மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :

பருவமழையையொட்டி அரசு மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையொட்டி தமிழக அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைகள் மழைக்குப் பின் சீரமைப்பு என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பருவமழையையொட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் 7 நாள்களுக்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள், ஓ.ஆர்.எஸ்., பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகளை இருப்பு வைக்கவும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடையற்ற மருத்துவ சேவைகளை உறுதி செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்கவும், உயிர்காக்கும் உபகரணங்கள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பருவமழையையொட்டி அனைத்து அரசு மருத்துவமனைகளும் அனைத்து வகையான மருத்துவ சேவையை வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Monsoon: Uninterrupted power supply, medical services in government hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.