இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? (அக். 21)
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு....

கோப்புப் படம் - IANS
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விடியவிடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், "இன்று (அக்.21) இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், பெரம்பலூர், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary
TN Rain update for next 3 hours: Rain in 19 districts including chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


