வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது

அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

3 sisters arrested for smuggling liquor bottles from Puducherry state...

சீர்காழியில் அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது - கோப்புப்படம்

Updated On :

சீர்காழிக்கு அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை கட்டைப்பையில் வைத்து கடத்தி வந்த சகோதரிகள் 3 பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்காலில் இருந்து மதுபானங்கள் சீர்காழி பகுதிக்கு பேருந்தில் கடத்தி வருவதாக சீர்காழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாகையில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் வந்து சீர்காழி பேருந்து நிலையத்தில் கட்டைப்பையுடன் மூன்று பெண்கள் இறங்கினர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களது கட்டைப்பையை சோதனை மேற்கொண்டதில், அதில் 400 மதுப்புட்டிகளை விற்பனைக்காக சீர்காழிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தி வந்த கவிதா மற்றும் அவரது சகோதரிகள் சுகன்யா, வேம்பு ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 sisters arrested for smuggling liquor bottles from Puducherry state in a government bus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.