வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

என்எல்சி சுரங்க மண் படிந்து மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெல் வயல்கள்! விவசாயிகள் சாலை மறியல்

என்எல்சி சுரங்க மண் படிந்து 500 ஏக்கர் நெல் வயல்கள், மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சாலை மறியல்...

Farmers road blockade

சு.கீணனூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்... - DIN

Updated On :

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நெய்வேலி என்எல்சி மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண் சுமார் 500 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெல் வயலில் படிந்து, மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் இயங்கி வருகிறது. இங்குள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண் கம்மாபுரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம், சு.கீணனூர் பகுதிகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் மண் மேடு கரைந்து வந்து விவசாய நிலங்களில் படிந்து சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

சு.கீணனூா் பகுதியில் மழை நீரில் மூழ்கியுள்ள நடவு செய்யப்பட்ட நெல்..

சு.கீணனூா் பகுதியில் மழை நீரில் மூழ்கியுள்ள நடவு செய்யப்பட்ட நெல்.. - DIN

தற்போது, மேற்கண்ட கிராமங்களில் 1000 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, என்எல்சி நிறுவனம் கொட்டி வைத்திருந்த மண் மேடு கரைந்து அங்கிருந்த வாய்க்காலைத் தாண்டி வெளியேறியது. இதன் காரணமாக, மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண், நடவு செய்யப்பட்டிருந்த நெல் வயலின் அடியில் படிந்தும், மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்யப்பட்ட நெல் வயலில் மட்டு மண் படிந்து மழை நீர் தேங்கி நிற்பதால் கவலை அடைந்த விவசாயிகள், விருத்தாசலம் - சிதம்பரம் பிரதான சாலையில், சு.கீணனூர் பகுதியில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்மாபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வட்டாட்சியா் வந்ததும் பிரச்சனையை பேசி தீா்வு காணலாம், அதுவரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதனையடுத்து விவசாயிகளை மறியலை கைவிட்டனா்.

இதுகுறித்து விவசாயிகள் கம்மாபுரம் இ.அருள், கோவிந்தசாமி, கிருஷ்ணமூா்த்தி, கோபாலபுரம் தமிழ்செல்வன், சு.கீணனூா் சுதாகா் ஆகியோா் கூறுகையில்,

"சு.கீணனூா், கம்மாபுரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம் கிராமங்களை ஒட்டியப் பகுதிகளில் என்எல்சி நிறுவனம் மலைபோல மண் கொட்டி வைத்துள்ளது. இதன் அருகில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்திருந்தோம். இதில், நடவு செய்து ஒரு சில வாரங்களான பயிரும், நடவுக்காக தாயாா் செய்து வைத்திருந்த வயல்களும் அடங்கும். வியாழக்கிழமை இரவு பலத்த பெய்ததால், மண் மேட்டில் இருந்து வந்த மழைநீா் மட்டுவை அடித்து வந்து வயல் வெளியில் பரப்பியதால் நிலம் பாழ்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்த நிலையில், அனைத்தும் வீணாகிவிட்டது. என்எல்சி இந்தியா நிா்வாகம் வடிகால் வாய்க்கால் சரியான முறையில் அமைக்காததே சேதத்துக்கு காரணம். மண்மேடு பகுதியில் இருந்து வரும் மழைநீா் வடிந்து செல்ல, என்எல்சி இந்தியா நிறுவனம் பெரிய வாய்க்கால் வெட்டியுள்ளது. அந்த வாய்க்கால் அருகிலேயே மண் கொட்டியதால் தான் இந்த பாதிப்பு. எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.

எனவே, மழை பாதிப்பு காலத்தில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குவது போல, கம்மாபுரம் ஒன்றியம் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தைச் சுற்றியுள்ள சு.கீணனூா், கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தபாடி, ஆதனூா் ஆகிய கிராமங்களை சோ்க்க வேண்டும்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கிட்டு நிவாரணம் பெற்றத்தர வேண்டும் என்றாா்.

Summary

500 acres of paddy fields submerged in rainwater due to NLC mine mud Farmers road blockade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.