விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்தது தமிழக அரசு
விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பு வரும் நவ. 1-ஆம் தேதி முதல் 2027 அக். 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாகப் புறப்படும் எடையை 40,000 கிலோவுக்கு குறைவாகக் கொண்ட திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் மீதான வரி, பிற விமான நிலையங்களில் 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

