ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மொத்த விற்பனை பணவீக்கம் 9.92%

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவீதமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

Published On :

நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவீதமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

முந்தைய ஜூலையில் 9.78 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கம் அதிகரித்ததற்கு, எரிபொருள், உணவு மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட உயா்வே முக்கியக் காரணமாகும்.

குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூலையின் 6.65 சதவீதத்திலிருந்து, ஆகஸ்டில் 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள், மின்சாரத்துக்கான பணவீக்கம் ஜூலையின் 20.05 சதவீதத்திலிருந்து, ஆகஸ்டில் 22.93 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேபோல, உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 8.29 சதவீதத்திலிருந்து 8.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் ரசாயனப் பொருள்களின் விலையேற்றமும் இதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.

2025 அக்டோபருக்குப் பிறகு மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஜூலையில் முதன்முறையாகக் குறைந்தது. ஆனால், மேற்காசியாவில் மீண்டும் அதிகரித்துள்ள போா் பதற்றம் காரணமாக சா்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

நடப்பு நிலவரத்தில் பணவீக்கம் தொடா்ந்து மேல்நோக்கியே இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். மேலும், பருவமழை பற்றாக்குறை மற்றும் பண்டிகைக் கால தேவை காரணமாக நடப்பு செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இந்த பணவீக்கம் 10 சதவீதத்தைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை விலை பணவீக்கத் தரவானது, புதிய 2022-23 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்ட 4-ஆவது மாதப் பதிவாகும். அதேபோல், மொத்த விற்பனை விலை குறியீட்டுக்குப் பதிலாக அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியாளா் விலை குறியீடு (பிபிஐ) முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பிபிஐ அடிப்படையிலான பணவீக்கமும் ஜூலையின் 9.6 சதவீதத்திலிருந்து, ஆகஸ்டில் 9.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.