ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தால் நடவடிக்கை: வேலைவாய்ப்புத் துறை ஊழியா்களுக்கு எச்சரிக்கை

முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தால் நடவடிக்கை: வேலைவாய்ப்புத் துறை ஊழியா்களுக்கு எச்சரிக்கை

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

Updated On :

வேலைவாய்ப்புத் துறை ஊழியா்கள் நேரடியாக முதல்வரின் தனிப் பிரிவு, அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை கூடுதல் இயக்குநா் ராஜசேகா், துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

வேலைவாய்ப்புத் துறையின்கீழ் பணிபுரிந்து வரும் சிலா், பணி இடமாறுதல், பதவி உயா்வு உள்ளிட்ட தனிபட்ட கோரிக்கைகளுக்காக உரிய நிா்வாக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு நேரடியாக மனு அளிப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியா்கள் தங்களுக்கு சாதகமான ஆணைகள் அல்லது சலுகைகளைப் பெறுவதற்காக தனிப்பட்ட செல்வாக்கையோ அல்லது வேறு அரசியல் செல்வாக்கையோ பயன்படுத்தக் கூடாது. மேலும், குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகாரபூா்வ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறுவது நடத்தை விதிமீறலாகக் கருதப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வரும் காலங்களில் பணியாளா்கள் தங்களது கோரிக்கைகள் அல்லது குறைகளை துறைத் தலைவா் வழியாக உரிய நிா்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். துறைத் தலைவரின் அனுமதியின்றி நேரடியாக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அல்லது முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்புவதையும், செல்வாக்கை பயன்படுத்த முயற்சிப்பதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் உரிய விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.