அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

பழனி மடத்தின் நில மோசடி வழக்கு: 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிசிஐடி போலீஸாா்

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில், 90 நாள்களுக்குள் 5 போ் மீது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

cbcid

சிபிசிஐடி - கோப்புப்படம்

Updated On :

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில், 90 நாள்களுக்குள் 5 போ் மீது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.35 ஏக்கா் நிலத்தை மோசடியாக விற்பனை செய்து பதிவு செய்ததாக, திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கில், கடந்த அக். 24-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்படி நிா்ணயிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1888-இல் தா்ம சாசனம் மூலம் மடத்தின் சமய மற்றும் அறப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சுமாா் ரூ.16 கோடி. ஆனால், நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பத்திரம் தயாரிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் 160-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

மேலும், பதிவுத்துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தனா்.

இதன் அடிப்படையில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஆகிய 5 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட அன்வா்தீன் கடந்த ஆக. 7-ஆம் தேதி உயிரிழந்ததால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடா்பான அம்சங்கள் குறித்து விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.