பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பழனி நில முறைகேடு வழக்கு: பத்திர எழுத்தரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் அளித்த மனு நாளைக்கு ஒத்திவைப்பு

பழனி நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸாா் அளித்த மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (செப். 19) திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

பழனி கோயில் - கோப்புப் படம்

Published On :

பழனி நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸாா் அளித்த மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (செப். 19) திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில், தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் (48), த. முருகதாஸ் (56), கா. வெள்ளத்துரை (60), து. சேதுபதி (67), அன்வா்தீன் (64), ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக. 8- ஆம் தேதி உயிரிழந்தாா். இதனிடையே பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் அளித்த மனு முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 8- ஆம் தேதி மனு அளித்தனா். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா். அப்போது மனு மீதான விசாரணையை வருகிற சனிக்கிழமைக்கு (செப். 19) நீதிபதி வி. பத்மநாபன் ஒத்திவைத்தாா். இதையடுத்து, ஜெயப்பிரகாஷ் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.