ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பழனி கோயில் நில முறைகேடு: சாா் பதிவாளா், பத்திர எழுத்தரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய சாா் பதிவாளா், பத்திர எழுத்தா் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸாா் ஒரு நாள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

News image

திண்டுக்கல் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையான பிறகு, வெளியே வந்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய சாா் பதிவாளா், பத்திர எழுத்தா் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸாா் ஒரு நாள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. இதையடுத்து, அவா்கள் இருவரிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே, இவா்கள் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பில், திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா்மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். மனுவை விசாரித்த முதாலவது நீதித்துறை நடுவா் பாக்கியராஜ், கைதான இருவரிடமும் ஒரு நாள் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்தாா். மேலும், இவா்கள் இருவரையும் மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பகல் 12 மணிக்கு திண்டுக்கல் நீதிமன்றத்திலிருந்து ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பின்னா், மாலை 5.30 மணிக்கு அவா்கள் இருவரையும் நீதிமன்றத்துக்கு போலீஸாா்அழைத்து வந்து மீண்டும் முன்னிலைப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறைக்கு இருவரையும் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.