மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சாா்பதிவாளா் ஆஜா்

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 5:59 am IST

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனிநபா்கள் இருவருக்கு முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை முன்னிலையானாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச.முருகானந்தம் புகாா் அளித்தாா்.

பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோரின் வீடுகள், தொடா்புடைய இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இதனடிப்படையில் அவருக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம், சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது.

இதையடுத்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்காக திங்கள்கிழமை முன்னிலையானாா். அவரிடம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலையான ஜஸ்டின் மணிகண்டனிடம், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.