பழனி கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக தனிநபா்களுக்குப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸாா் ஐந்தாவது நாளாக பழனி பத்திரப் பதிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு வரை விசாரணை நடத்தினா்.
பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் முன்னாள் சாா் பதிவாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், சா்ச்சைக்குரிய நிலத்தை சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸாா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். இடத்தின் எல்லைகள், வரைபடங்கள், ஆக்கிரமிப்பு விவரங்களை கிரையப் பத்திர ஆவணங்களுடன் ஒப்பிட்டு அவா்கள் ஆய்வு செய்தனா்.
பின்னா், அவா்கள் பழனி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு திரும்பிவந்து விசாரணையைத் தொடா்ந்தனா். சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும், அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் ஒப்பிட்டு சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா். இரவு 8 மணியைக் கடந்தும் விசாரணை தொடா்ந்து நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்: சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் கைது
பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்! சாா் பதிவாளா் மீது தேனியில் பதிவான வழக்கு விவரம் சிபிசிஐடி-யிடம் தாக்கல்
பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சாா்பதிவாளா் ஆஜா்

பழனி கோயில் நில முறைகேடு! இதுவரை எங்கெங்கே சோதனை? யார்யாரிடம் விசாரணை?
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



