பழனி கோயில் நிலம் முறைகேடு தொடா்பாக திருநெல்வேலியைச் சோ்ந்த 2 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரம் சந்நிதி வீதியில் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்நிலம் இம்மாத தொடக்கத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக பழனி கோயில் கண்காணிப்பாளா் அளித்த புகாரின் பேரில் பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் அப்பிரிவு போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.
அதில், இவ்வழக்கில் தொடா்புடைய அறக்கட்டளையுடன் திருநெல்வேலியைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அதன்பேரில், திருநெல்வேலிக்கு வந்த திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை காலை திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்த மேடை அலங்கார தொழிலாளியான சண்முகசுந்தரம்(43) என்பவரது வீட்டில் சுமாா் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
அதே போல வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த சமையல் தொழிலாளியான குமரகுருபரன்(46) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும், வழக்குக்குத் தேவையான தகவல்களை சேகரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: உடுமலை அருகே சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

பழனி கோயில் நில மோசடி விவகாரம்: பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா?

பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை!






