திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக ரூ.2 கோடிக்கு தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள பாப்பான்குளம் கிராமத்தில் கோவை சிபிசிஐடி ஆய்வாளா் கேசவன் தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். இவா்களுடன் மடத்துக்குளம் வட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் இருந்தனா்.
நிலத்தை முறைகேடாக ரூ.2 கோடிக்கு கிரையம் செய்தவா்களில் ஒருவரான வெள்ளைத்துரை (52) வீட்டுக்கு காலை 7 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீஸாா் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினா்.
பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற விசாரணைக்குப் பின்னா் வீட்டில் இருந்த மடிக்கணினி, ஆவணங்களை போலீஸாா் எடுத்துச் சென்றனா்.
இதற்கிடையே, வெள்ளைத்துரை தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரைக் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சாா் பதிவாளா், திமுக பிரமுகா் வீடு உள்பட 6 இடங்களில் சோதனை!
பழனி கோயில் நில மோசடி விவகாரம்: நெல்லையில் 2 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

பழனி கோயில் நில மோசடி விவகாரம்: பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா?






