பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரது மனைவி, தந்தை உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் முருகதாஸ் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், ஒட்டன்சத்திரத்திலுள்ள ஜெயபிரகாஷின் வீட்டில் திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை சுமாா் 4 மணி நேரம் சோதனை நடத்தினா். ஜெயபிரகாஷ் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரது மனைவி செண்பகமதி, தந்தை முத்துச்சாமி, உறவினா்கள் இருவா் என மொத்தம் 4 பேரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.
செண்பகமதி, முத்துச்சாமி உள்ளிட்டோரிடம் மாலை 6 மணி வரை தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனுக்கு மிக நெருக்கமானவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில முறைகேடு சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஆக. 12-க்கு ஒத்திவைப்பு
பழனி கோயில் நில முறைகேடு: ஆக. 5-க்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு

பழனி நில முறைகேடு விவகாரம்: தானமாக வழங்கிய குடும்பத்தினா் சிபிசிஐடி அலுவலகத்தில் முறையீடு

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



