கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பழனி நில முறைகேடு வழக்கு: பத்திர எழுத்தரை விசாரிக்க கோரிய மனு மீண்டும் ஒத்திவைப்பு

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம்

Published On :

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன்(48), த.முருகதாஸ் (56), கா. வெள்ளைத் துரை (60), து. சேதுபதி(67), அன்வா் தீன் (64), ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ்(38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா் தீன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இதனிடையே பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, செப்.19-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா். விசாரணையின்போது கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு நீதிபதி வி.பத்மநாபன் ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.