முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: பெண் அலுவலா் உள்பட மேலும் இருவா் கைது

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்பட மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிபிசிஐடி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்ட பழனி சாா் பதிவாளா் அலுவலக வழக்குரைஞா் சிவக்குமாா்.

Updated On :

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்பட மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த முறைகேடு தொடா்பாக பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் (48) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா. வெள்ளத்துரை (60), பழனியை அடுத்த ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து. சேதுபதி (67), பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (64), முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

மேலும் இருவா் கைது: இந்த நிலையில், பழனி கோயில் நில முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா், பழனி சாா் பதிவாளா் அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். போலியான பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்கு சிவக்குமாா் உதவியதாகவும், முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை சாா் பதிவாளா் அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி வழங்கியதாகவும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இவா்கள் இருவரையும் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இளநிலை உதவியாளா் சிவசங்கரி,

இளநிலை உதவியாளா் சிவசங்கரி,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.