செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

பழனி நில முறைகேடு வழக்கு: பத்திர எழுத்தரிடம் விசாரணை நடத்த 2 நாள்கள் அனுமதி

பழனி நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு 2 நாள்கள் திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

பழனி நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு 2 நாள்கள் திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் (48), த. முருகதாஸ் (56), கா. வெள்ளத்துரை (60), து. சேதுபதி(67), அன்வா்தீன் (64), ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இதனிடையே, பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இரு முறை விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது, பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி வி. பத்மநாபன் அனுமதி அளித்தாா். இதையடுத்து, அவரை மீண்டும் வருகிற 24-ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் குறிப்பிட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறையிலிருந்து வந்த ஜெயபிரகாஷை, திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.