சிஎஸ்கே பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், மோஹித் சர்மா நியமனம்!புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து!‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

தேனி சிறையில் தப்பிய மேலும் ஒருவர் கைது; பிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளது பற்றி...

Another person who escaped from Theni prison has been arrested

தேனி சிறையில் தப்பிய மேலும் ஒருவர் கைது... - கோப்புப்படம்

Updated On :

தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் 200 பேர் இருக்க வசதி உள்ள நிலையில் 334 கைதிகள் அடைப்பட்டிருந்தனர். அங்கு ஒரு சிறையில் 17 பேர் இருந்த நிலையில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறவே, சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறையில் இருந்த கைதிகள், காவலர்களைத் திடீரென தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பினர். இரண்டு காவலர்கள் காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

17 கைதிகள் தப்பியோடிய நிலையில் இன்று காலை வரை 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளியான லிங்கபிரசாத் என்பவர் தப்பியோடி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, ஆட்டோ ஓட்டுநர் முத்துக்காளை என்பவரின் ஆட்டோவில் ஏறி கண்டமனூர் விலக்கில் இறக்கிவிடச் சொல்லியுள்ளார்.

ஆட்டோ போய்க்கொண்டிருக்கும்போது இடையே சோதனையில் ஈடுபட்ட காவலர் ஒருவர், சந்தேகத்தின்பேரில் ஆட்டோவின் பின்னால் பைக்கில் வந்து கைதியை பிடிக்க முற்பட்டுள்ளார். காவலரின் சத்தம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை நிறுத்தி கைதியை கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார். பின்னர் அவர் தப்பியோடிய கைதி என்பதை உறுதி செய்த காவலர், கைதியை சிறை வாசலில் கொண்டு வந்துவிட சொன்னதன்பேரில் ஆட்டோ ஓட்டுநர் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார்.

தற்போது 5 பேர் பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சிய 12 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி மாவட்ட சிறையில் ஆய்வு செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

Another person who escaped from Theni prison has been arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.