ஆந்திரம் நோக்கி ஒர்னாப் புயல்! சென்னையில் அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில்!
அடுத்த நான்கு நாள்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி..

வெய்யில்
வங்கக்கடலில் நிலவிய ஒர்னாப் புயல் ஆந்திரத்தை நோக்கி சென்றதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த நான்கு நாள்களுக்கு ஒரு சில இடங்களில் வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று (26-10-26) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 17.30 மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 23.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (27-10-26) காலை 08.30 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (28-10-26) ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.
சுமார் 3.1 கிமீ உயரம் வரை இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலிருந்து, 'அர்னாப்' (Arnab) மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றுந (அக். 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அக். 31 வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை..
அக். 31 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொருத்தவரை..
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை..
27-10-2026 மற்றும் 28-10-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

