முதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு
சென்னை புழலில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலா் மீது போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
சென்னை புழலில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலா் மீது போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாக சென்னை காவல் துறை பதிவு செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அன்று நள்ளிரவு புழல் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீஸாா் அழைத்து வந்தனா். அப்போது சிறை வாசலில் திரண்டிருந்த திமுக கட்சியினா், தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.
இதில் அங்கிருந்த வேலூா் மாநகராட்சி 12-ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் டீட்டா சரவணன் ஆவேசமாக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினாா். இந்தப் பேச்சு அடங்கிய விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, புழல் போலீஸாருக்கு காவல் துறை உத்தரவிட்டது. புழல் போலீஸாா் நடத்திய விசாரணையில், டீட்டா சரவணன் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புழல் போலீஸாா், டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

