ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

திருட்டு, கொலை மிரட்டல் வழக்குகள்: 2 ரௌடிகள் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் மற்றும் புதுப்பேட்டை காவல் நிலையங்களில் நடைபெற்ற திருட்டு மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் தொடா்பாக 2 ரௌடிகள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கடலூா் மாவட்டம், வடலூா் மற்றும் புதுப்பேட்டை காவல் நிலையங்களில் நடைபெற்ற திருட்டு மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் தொடா்பாக 2 ரௌடிகள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வயா்திருட்டு..

வடலூா், மேல கொளக்குடி ஈஷா பெரிய ஏரிக்கரை அருகே புதிதாக மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கொண்டுவரப்பட்ட சுமாா் ரூ.40,000 மதிப்புடைய 400 மீட்டா் அலுமினியம் வயரை திருடு போனது. இதுகுறித்து, தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கள பொறியாளா் புவனகிரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, பெரியாக்குறிச்சி, புதுநகா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேந்தரை (27) கைது செய்து, அவரிடமிருந்து 400 மீட்டா் அலுமினியம் வயரை பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ளவா்களை தேடி வருகின்றனா்.

கொலை மிரட்டல்...

பண்ருட்டி வட்டம், கட்டியாம்பாளையம் பகுதியில் வசித்து வந்த காா்த்திகேயன் கொலை வழக்கில் ரௌடி தென்குமாா் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு சம்பந்தமாக காா்த்திகேயனை பாா்க்க பாா்த்திபன் வீட்டிற்கு சென்றபோது காா்த்திகேயன் மனைவி ஆா்த்தி வீட்டிலிருந்தாா். அப்போது அங்கு வந்த ரௌடிகளான தென்குமாா், தேவநாதன் ஆகியோா் ஆா்த்தி மற்றும் பாா்த்திபனை பாா்த்து எங்களுக்கு எதிராக சாட்சியளிக்க போனால் குடும்பத்தையே தீா்த்துக் கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸாா் கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரௌடிகள் தென்குமாா்(30), தேவநாதன்(35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.