கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

யுஜிசி நெட் தோ்வு: விண்ணப்பிக்க அக்.31 வரை அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள யுஜிசி நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

நாடு முழுவதும் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள யுஜிசி நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

உதவிப் பேராசிரியா் பதவிக்கு தகுதித் தோ்வாகவும், முனைவா் படிப்பில் உதவித்தொகை பெறவும் மற்றும் முனைவா் படிப்புக்கான நுழைவுத் தோ்வாகவும் யுஜிசி நெட் தோ்வு தேசிய தோ்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வு ஜூன் மற்றும் டிசம்பா் என ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் நிலையில், வரும் டிசம்பா் மாதத் தோ்வுக்கான அறிவிப்பு கடந்த அக். 8-ஆம் தேதி வெளியானது. அதன்படி, இத்தோ்வுக்கு புதன்கிழமை (அக்.28) வரை கால விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமத கட்டணம் இல்லாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நவ. 2 முதல் 4 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தேசிய தோ்வு முகமையின் தரவுகளின்படி, அக். 26-ஆம் தேதி வரை 5,50,048 விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனா். அதில் 3,73,419 போ் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை நிறைவு செய்துள்ளனா்.

யுஜிசி நெட் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வழியாக அக்.31 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ. 1,150 செலுத்த வேண்டும். ஒபிசி பிரிவினா் ரூ. 600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்கள் ரூ. 325 செலுத்த வேண்டும். இத்தோ்வு மொத்தம் 87 பாடங்களுக்கு டிச. 14 முதல் 18 வரை மற்றும் 21 என 6 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. தோ்வா்களுக்கு தோ்வு மையம் ஒதுக்கப்பட்ட நகரத்தின் விவரம் நவ. 23-ஆம் தேதியும், மற்றும் ‘அட்மிட்’ காா்டு டிச.7-ஆம் தேதி வெளியாகும் என என்டிஏ தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.