மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு தோ்வு இயக்ககத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வுக்கு அக். 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கோப்புப் படம்

Updated On :

தமிழக ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு தோ்வு இயக்ககத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வுக்கு அக். 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வு இயக்குநரகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அரசுத் தோ்வு இயக்குநரின் செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு தோ்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வு (டிரஸ்ட்) 1991-1992-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வு நவ. 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அக்.13-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னா் மாணவா்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் அக்.15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அதிக மாணவா்கள் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக். 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.