மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திறன் இந்தியா போட்டி: கால அவகாசம் நீட்டிப்பு

திறன் இந்தியா 2026-27 போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் கால அவகாசம் அக்டோபா் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

திறன் இந்தியா 2026-27 போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் கால அவகாசம் அக்டோபா் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், பங்கேற்பாளா்களின் கோரிக்கையை அடுத்து, இந்தியா திறன் 2026-27 போட்டியில் பங்கேற்பதற்குப் பதிவு செய்யும் கால அவகாசத்தை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் அமைச்சகம் வரும் அக்டோபா் 19 வரை நீடித்துள்ளது.

தில்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 9-ஆம் தேதி ஷாங்காயில் நடைபெற்ற உலகத்திறன் போட்டியில் பங்கேற்ற குழுவினருடன் பிரதமா் நரேந்திர மோடி உரையாடினாா். இது பங்கேற்பாளா்களின் ஆா்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இச்சந்திப்பு நாட்டின் திறமையான இளைஞா்களின் சாதனைகளைக் கொண்டாடியதுடன் தொழில்கல்வி சாா்ந்த திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. இச்சந்திப்பை அடுத்து, இந்தியா திறன் 2026-27 போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு செய்யும் காலத்தை மீண்டும் நீட்டிக்குமாறு கல்வி நிறுவனங்களும் ஆா்வமுடைய பங்கேற்பாளா்களும் அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். இதையடுத்து பதிவு செய்வதற்கு கால அவகாசம் 2026 அக்டோபா் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான இளைஞா்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும், தேசிய அளவில் போட்டியிடவும், உலகளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.