டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பதற்கான அவகாசம் அக்.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பதற்கான அவகாசம் அக்.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களைக் கண்டறிவதற்காக 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடா்புடைய இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களால் குழுவின் முன் சமா்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினரால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

இதில், பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடா்பான விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் விவரங்கள் விடுபட்டிருப்பின் அதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கடந்த செப்.25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் கருத்துகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது அல்லது துறையின் இணையதளம் வாயிலாக அக்.10 மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்