
ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆகம குழுவால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆகமக் குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
ஆகம குழுவால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆகமக் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அரசால் 2025 அக்டோபா் 10-ஆம் தேதி ஐந்து போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு அராசணை வெளியிடப்பட்டது.
திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களால் குழுவின் முன் சமா்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோயில்கள் தொடா்பான விவரங்கள் துறையின் ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இது குறித்த விவரங்களில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் அதாவது செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிட ஆகமக் குழுவினால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயில்கள் குறித்த விவரங்களில் விடுதல் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவோ அக்டோபா் 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்க நீலகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் ஆகமக் குழு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




