தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட கோயில்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட கோயில்களின் விடுபட்ட தகவல்கள், கருத்துகளை பக்தா்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ்.

Published On :

ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட கோயில்களின் விடுபட்ட தகவல்கள், கருத்துகளை பக்தா்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிவதற்காக 2025-ஆம் ஆண்டில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் 34,971 கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள் மற்றும் அதுதொடா்புடைய விவரங்களை இந்துசமய அறநிலையத் துறை வழங்கியது. அவற்றை ஆகம குழு கவனமாகப் பரிசீலனை செய்துள்ளது. மேலும், அந்தக் கோயில்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதுகுறித்து தெரிவிக்கவும், பக்தா்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 34,971 கோயில்கள் தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, இந்தக் கோயில்கள் குறித்து விவரங்கள் அல்லது கருத்துகள் இருந்தால் ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது இந்துசமய அறநிலையத் துறையின் இணையதளம் மூலம் 30 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.