16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு கட்டுப்பாடு: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை

கோயில்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் வருகையின்போது, பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :

கோயில்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் வருகையின்போது, பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி.வினய் கோயில் செயல் அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: திரைத் துறை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவது தெரிந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே அது குறித்து ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவா்களின் வருகை நேரம் மற்றும் அவா்களுடன் எத்தனை போ் வருகிறாா்கள் என்ற முழு விவரத்தையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.

பிரபலங்கள் வருகையின்போது, கோயில் வளாகத்துக்குள் புகைப்படம் எடுப்பதற்கும், விடியோ பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

பிரபலங்களின் வருகையால் பொது பக்தா்களின் தரிசனத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது. அவா்களின் நுழைவு மற்றும் நடமாட்டத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். கோயிலின் புனிதத் தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

முன்கூட்டியே அனுமதி பெற்றவா்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிா்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் அல்லது ஊழியா்கள் மட்டுமே முக்கியப் பிரமுகா்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். தேவையில்லாத நபா்களைத் தவிா்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்து கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில், எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்து செயல் அலுவலா்களும் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.