சமூக நலக்கூட பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மாநகராட்சி சமூக நலக் கூட பணியாளா்கள், சகி சேவை மைய ஊழியா்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்

அன்புமணி - கோப்புப் படம்
மாநகராட்சி சமூக நலக் கூட பணியாளா்கள், சகி சேவை மைய ஊழியா்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலா்கள் மற்றும் பராமரிப்பு பணியாளா்களுக்க்கு கடந்த 2 மாதங்களாகவும், வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை.
மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலும், நியமிக்கப்பட்ட இந்தத் தொழிலாளா்களுக்கு மாதக் கணக்கில் ஊதியம் வழங்காமல் துயரத்துக்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், இந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் எனப்படும் மிகை ஊதியமோ, முன்பணமோ வழங்கப்படாது என்பதால், மிகக்குறைந்த ஊதியத்தைக் கொண்டுதான் விழாவைக் கொண்டாட வேண்டும். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

