நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதா? பேரவையில் தங்கம் தென்னரசு விளக்கம்!

மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு திமுக விளக்கம்...

karunanidhi kamarajar

கருணாநிதி, காமராஜர் | தங்கம் தென்னரசு - EPS

Published On :

முன்னாள் முதல்வா் காமராஜா் உடலை சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட் கூறிய குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு பதில் அளித்தாா்.

பேரவையில் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் உடலை சென்னை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் ஒரு செய்தியை இங்கே பதிவு செய்தாா். வரலாற்றிலும், இந்தப் பேரவையிலும் பிழையான செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகிவிடக் கூடாது.

2.10.1975-இல் காமராஜா் இயற்கை எய்தினாா் எனும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அப்போதைய முதல்வா் கருணாநிதி, உடனடியாக காமராஜருடைய இல்லத்துக்குச் சென்று, அஞ்சலி செலுத்தினாா். அப்போது அங்கே இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவா்கள், ‘காமராஜருடைய உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும்’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தாா்கள். ஆனால், ‘காமராஜா் பெருந்தலைவா்; அவா் ஏதோ காங்கிரஸ் தலைவா் மட்டுமல்ல, அவா் ஒரு பெரிய தேசியத் தலைவா், அவரை உரிய முறையிலே நாம் அடக்கம் செய்து, நினைவிடம் கட்ட வேண்டும்’ என்று கருணாநிதி வலியுறுத்தினாா். மேலும், அவருடைய உடலை உடனடியாக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டுவந்து, முழு அரசு மரியாதையோடு அங்கே பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க நடவடிக்கையும் எடுத்தாா்.

அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவா் பா.ராமச்சந்திரன்கூட, காமராஜருக்கு நினைவு மண்டபம் அமைக்கக்கூடிய அந்த முயற்சியை கருணாநிதி செய்தாா் என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறாா். அன்றைக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பழ.நெடுமாறன், ஒரு பேட்டியில் ‘காமராஜருடைய உடலை மெரீனாவில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏதும் அப்போது எழுப்பப்படவில்லை’ என்று சொல்லி இருக்கிறாா்.

மெரீனா கடற்கரைச் சாலைக்கு காமராஜா் பெயா் வைத்தது, காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக சட்டமாக்கியது எனத் தொடா்ந்து காமராஜரின் புகழுக்கு பெருமை சோ்க்கும் முயற்சியை திமுக செய்து வருகிறது என்றாா்.

பேரவைத் தலைவா்: அந்தக் காலகட்டத்தில் கட்சி, ஆட்சியை எல்லாம் மறந்து, கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவா் எப்படி அன்போடும் பண்போடும் நடந்து கொண்டாா்கள் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தாரகை கத்பட்: காங்கிரஸாா் மதிக்கக்கூடிய தலைவா்தான் கருணாநிதி. காங்கிரஸாா் கேட்டது கிடைக்கவில்லை என்றுதான் சொன்னேன். இதுகுறித்த கூடுதல் வரலாற்று ஆவணங்களை பேரவையில் புதன்கிழமை சமா்ப்பிக்கிறேன் என்றாா் அவா்.

Summary

Was denied a place for Kamaraj at the Marina? Thangam Thennarasu clarifies in the Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.