பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

திமுக முப்பெரும் விழா: விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு!

திமுகவின் முப்பெரும் விழாவில் நடப்பாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

முதல்வர் ஸ்டாலின்.

திமுக தலைவர் ஸ்டாலின்.

Published On :2 செப்டம்பர் 2026, 9:35 am IST

திமுகவின் முப்பெரும் விழா வருகிற செப். 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து மும்பெரும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா செப். 15-ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவையொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்

  • பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா

  • அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்

  • கலைஞர் விருது - துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா

  • பாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு

  • பேராசிரியர் விருது - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி

  • மு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா

Summary

With the DMK's 'Mupperum Vizha' set to be celebrated on September 15, the party leadership has released the list of award recipients for this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.