
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து!
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுள்ளதாவது:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதானது, நாடு முழுவதும் மொத்தம் 48 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
à®à®à®¿à®°à®¿à®¯à®°à¯ தினதà¯à®¤à¯ à®®à¯à®©à¯à®©à®¿à®à¯à®à¯, மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®à¯ à®à¯à®à®¿à®¯à®°à®à¯à®¤à¯ தலà¯à®µà®°à¯ à®à®µà®°à¯à®à®³à®¾à®²à¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯ தà¯à®à®¿à®¯ நலà¯à®²à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯ விரà¯à®¤à®¿à®±à¯à®à¯ தà¯à®°à®¿à®µà¯à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ பà¯à®³à®¿à®¯à®®à¯à®ªà®à¯à®à®¿ à®à®°à®¾à®à¯à®à®¿ à®à®©à¯à®±à®¿à®¯ தà¯à®à®à¯à®à®ªà¯ பளà¯à®³à®¿ à®à®à®¿à®°à®¿à®¯à®°à¯ திரà¯.தà®à¯à®à®°à®¾à®à¯ மறà¯à®±à¯à®®à¯ மதà¯à®°à¯, பிà®à®®à¯ ஸà¯à®°à¯ à®à¯à®¨à¯à®¤à®¿à®°à®¿à®¯ விதà¯à®¯à®¾à®²à®¯à®¾ பளà¯à®³à®¿â¦
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2026
Summary
Chief Minister C. Joseph Vijay extended his congratulations on Saturday (Aug. 22) to the teachers from Tamil Nadu who are receiving the National Award for Teachers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





