தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்து 8 மாணவிகள் காயம்! நடத்துநர் தள்ளிவிட்டதாக புகார்!

புதுக்கோட்டை அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது பற்றி...

Eight school girls injured allegation that the conductor pushed them from pudukottai govt bus

புதுக்கோட்டையில் அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாக புகார் ... - X

Published On :2 செப்டம்பர் 2026, 10:49 am IST

புதுக்கோட்டை அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாள்சத்திரம் சத்திரம் அருகே கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ஏறியுள்ளனர்.

அப்போது கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி அந்த மாணவிகளை நடத்துனரும் பேருந்தில் இருந்தவர்களும் கீழே இறங்கச் சொல்லியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நடத்துனர், அந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்க கதவைத் திறந்துள்ளார். அப்போது மாணவிகள் வரிசையாக கீழே விழுந்துள்ளனர்.

இதில் 8 மாணவிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவியின் ஒருவரின் காலில் பேருந்தின் டயர் ஏற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்த பழங்குடியின கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ரெங்கம்மாள்சத்திரம் அருகே அரசுப் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Eight school girls injured allegation that the conductor pushed them from pudukottai govt bus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.