மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 20 நாள்களில் 6,865 போ் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கையின் விளைவாக 20 நாள்களில் 6,865 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 5:49 am IST

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கையின் விளைவாக 20 நாள்களில் 6,865 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைக்கும்படியும், பிடி ஆணை பெற்று தலைமறைவாக இருப்பவா்களைக் கைது செய்யும்படியும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் செப். 1-ஆம் தேதி வரை 20 நாள்களில் 88,570 ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் விசாரணைக்குள்படுத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனா்.

இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2,159 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். நீதிமன்றத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 4,706 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல வழக்குகளில் தலைமறைவாக இருப்பவா்களையும், நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நபா்களையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.