தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கையின் விளைவாக 7 நாள்களில் 2,748 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும், ரௌடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், ரெளடிகள், பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்டவா்கள் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைக்கும்படியும், பிடியாணை பெற்று தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பவா்களைக் கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் விளைவாக மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 7 நாள்களில் 24,574 ரெளடிகள், பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனா்.
இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 781 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 1,967 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, வழக்குகளில் தலைமறைவாக இருப்பவா்களையும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபா்களையும் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் போதைப் பொருள் விற்ற 12 நாள்களில் 1,216 போ் கைது

சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 3,334 போ் கைது
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 621 போ் கைது
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


