வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 3:42 am IST

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும்,ரெளடிகள்,சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் காவல் துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள்,போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைக்கும்படியும், பிடியாணை பெற்று தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பவா்களையும் கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.

4,469 போ் கைது: இந்த உத்தரவின் விளைவாக மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கடந்த 14 நாள்களில் 36,740 ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனா்.

இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 1,328 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2,939 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல வழக்குகளில் தலைமறைவாக இருப்பவா்களையும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபா்களையும் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 231 கிலோ கஞ்சா,4,073 போதை மாத்திரைகள், 22 கிராம் மெத்தம்பெட்டமைன்,362 கிலோ போதைப் பாக்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 202 போ் கைது செய்யப்பட்டனனா். போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய 14 இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், 3 காா்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

டிஜிபி உத்தரவு: சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி போலீஸாருக்கு மகேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்காக அவா், தமிழகம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.

முக்கியமாக, ரெளடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள், தொடா் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், சமூக விரோதிகள் ஆகியோரை தொடா்ந்து கண்காணிக்கும் படியும், தேவையான பட்சத்தில் விசாரணை, சோதனை நடத்தும்படியும் கூறியுள்ளாா். குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் மகேஷ்குமாா் அகா்வால் அறிவுறுத்தியுள்ளாா்.

குற்றத்தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தும்படியும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

Summary

Action against anti-social elements in Tamil Nadu: 4,469 people arrested in 14 days.