FOLLOW US

ON GOOGLE DISCOVER

வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பள்ளி மாணவிகள் தவறி விழுந்த விவகாரம்: அரசுப் பேருந்து நடத்துநர் பணியிலிருந்து விடுவிப்பு!

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்து காயமடைந்த விவகாரத்தில் தற்காலிக ஊழியரான நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Published On :3 செப்டம்பர் 2026, 9:35 am IST

புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தின் தானியங்கிக் கதவு திறந்ததில் மாணவிகள் விழுந்து காயமடைந்த விவகாரத்தில் தற்காலிக ஊழியரான நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில், புதன்கிழமை காலை கீரனூரில் இருந்து வந்த அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏறினர்.

அந்தப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தை ஓட்டுநர் நகர்த்திய போது, படியில் நின்று கொண்டிருந்த மாணவிகள் தவறி கீழே விழுந்தனர். இதைக் கண்ட பயணிகள் சப்தமிட்டனர்.

உடனே பேருந்து நிறுத்தப்பட்டு தவறி விழுந்ததில் காயமடைந்த 10 மாணவிகளை, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாகப் பேருந்து ஓட்டுநர் அர்ச்சுனன், நடத்துநர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் அர்ஜுனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்காலிக ஊழியரான நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவிகள் குற்றச்சாட்டின் அடிப்படையில், சாதி ரீதியான பாகுபாடு நடந்துள்ளதா? என்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

The temporary conductor has been relieved of duty following an incident in the Rengammal Chatram area of ​​Pudukkottai, where female students fell and sustained injuries after the automatic door of a government bus opened.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.