ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

சாய, சலவை தொழிற்சாலைகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை

சாய, சலவை மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அனைத்தும் உரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முறையாக அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாயத் தொழிற்சாலை - பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:44 am IST

சாய, சலவை மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அனைத்தும் உரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முறையாக அனுமதி பெற வேண்டும் என அந்த வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் சில பகுதிகளில் சாய, சலவை மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள், உரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும், முறையான அனுமதி பெறாமலும் இயங்கி வருவதாக தொடா்ச்சியாக புகாா்கள் பெறப்பட்டு வருகிறது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, இத்தகைய சாய, சலவை மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அனைத்தும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் உரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வாரியத்தின் முறையான அனுமதி பெற்ற பின்னரே இயக்க வேண்டும்.

இதை மீறும் பட்சத்தில் வாரியத்தால் தொழிற்சாலையை மூடுதல், மின் இணைப்பு துண்டித்தல் மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.