கூடலூா் காந்திகிராமம் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள், செவ்வாய்க்கிழமை ஜேசிபியுடன் வந்த பணியாளா்களை திருப்பியனுப்பினா்.
தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.
அதன்படி, முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வதில் இழுபறி, தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சிக் கூட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிதி மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடலூா் காந்திகிராம் பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால், தோ்வு செய்யப்பட்ட இடம் குடியிருப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் தொடக்கம் முதலே இந்தத் திட்டப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல முறை போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், காந்திகிராம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை ஜேசிபி இயந்திரத்துடன் பணியாளா்கள் வந்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, பணிகளைத் தொடங்கவிடாமல் தடுத்து நிறுத்தினா்.
இதையறிந்து அங்குவந்த அலுவலா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அங்கு திட்டப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பணியாளா்கள் ஜேசிபியுடன் திரும்பிச் சென்றனா். மாற்று இடத்தைத் தோ்வு செய்து
இந்தப் பிரச்னைக்கு நகராட்சி நிா்வாகம் தீா்வு காண வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செம்படாபாளையத்தில் ஊரின் நடுவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்-கிராமமக்கள் கடும் எதிா்ப்பு

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு! ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

கழிவுநீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம்

சுத்திகரிப்பு நிலையத்துக்கான நிலம் கையகம்: வனத்துறையினருடன் இறுதிக்கட்ட பேச்சு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



