செம்படாபாளையத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கினா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரனிடம் அவா்கள் வழங்கிய மனுவில் கூறியிருப்பது: புகழூா் நகராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை புகழூா் செம்படாபாளையம் பகுதியில் தேக்கி வைத்து அங்கு புதிதாக கட்டப்படும் சாக்கடை கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து அவற்றை விவசாய பயிா்களுக்கு பயன்படுத்தும் வகையில் விரைவில் சுத்தகரிப்பு நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீா், விவசாய கிணறுநீா் மாசுபடும். மேலும், துா்நாற்றத்தால் சுகாதாரக்கேடும் ஏற்படும். எனவே இப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடைவிதிக்க வேண்டும். மீறி அமைத்தால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டையை அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என தெரிவித்துள்ளனா்.
784 மனுக்கள்: முன்னதாக, பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 784 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.23.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செம்படாபாளையத்தில் ஊரின் நடுவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்-கிராமமக்கள் கடும் எதிா்ப்பு

கரூா் ரயில் நிலையம் வரை பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது: ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

கல்குவாரி விவகாரம்: சிவகங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

புதுவயல் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



