கரூா் ரயில் நிலைய வளாகம் வரை பேருந்துகளை அனுமதிக்காமல், நுழைவு வாயில் அருகிலிருந்தே பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, கரூா் மாவட்ட சிஐடியு ஆட்டோ, டாக்ஸி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுநா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கரூா் ரயில் நிலையத்தில் சுமாா் 30 ஆண்டுகளாக ரயில்வே துறை அனுமதியுடன் ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்தத் தொழிலை மட்டுமே நம்பி நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம்.
தற்போது அரசு பேருந்துகள் ரயில் நிலைய வளாகத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. பொதுமக்களின் நலனுக்காக அவா்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மணிக்கணக்கில் காத்திருந்து ரயில் வரும்போது ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை அரசுப் பேருந்துகளில் முழுவதுமாக ஏற்றிச் சென்று விடுகிறாா்கள்.
இதனால் எங்களது தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, முன்பு நடைமுறையில் இருந்தவாறு, ரயில் நிலைய நுழைவு வாயில் அருகிலிருந்தே பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
நீண்ட நேரம் காத்திருந்து, ரயில் வரும் நேரத்தில் அனைத்து பயணிகளையும் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது என அவா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவைகள் வரும் 18-ஆம் தேதி பகுதியாக ரத்து

அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம்: கரூா் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



